காதல் என்பது?
உலகத்து உயிர்களை
உன் உயிர்போல் நேசிப்பது
அன்பு என்றால் -
உனக்கான உயிர் ஒன்றை
உலகளவுக்கு நேசிக்கும்
காதல் அன்பு தானே!!!
கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி என்றால் -
அவளிடம் அன்பை
கொடுக்க கொடுக்க வளர்வதால்
காதல் கல்வி தானே!!!
உலகத்தை சுருக்கி
உள்ளங்கையில் வைப்பது
அறிவியல் என்றால் -
உலக உயிர்களை சுருக்கி
உள்ளங்களில் அடக்கி வைக்கும்
காதல் அறிவியல் தானே!!!
மதங்களை உடைத்து
மனங்களை சேர்ப்பது
மனிதம் என்றால் -
மதங்களை மறந்து
மனங்களை கோர்க்கும்
காதல் மனிதம் தானே!!!
வேண்டும் வரம் கிடைக்க
வேண்டுவது தவம் என்றால் -
அவள் - வேண்டுமென்று
தவித்துக் கொண்டேயிருக்கும்
காதல் தவம் தானே!!!
தன்னை நிராகரித்தவனையும்
நலமாயிருக்க நினைப்பவன்
இறைவன் என்றால் -
ஒருதலை உணர்ச்சிகளை கொன்றவரும்
நலமாயிருக்க நினைக்கும்
காதல் இறைவன் தானே!!!
தவறுகளை மன்னிப்பது
இறைப்பண்பு என்றால் -
அவள் தவறுகளை
மன்னித்து மறந்தேபோகும்
காதல் இறைப்பண்பு தானே!!!
உள்ளது உள்ளதைத் தேடும்
உள்ளது உள்ளதைச் சேரும் - இது
உலக நியதி என்றால் -
தனக்காய் பிறந்த உள்ளத்தை
தானே தேடிச் சேரும்
காதல் நியதி தானே!!!
தகுதி உள்ளவனே
தழைத்து வாழ்வான் என்றால் -
நிலைத்து வாழும்
தழைத்து வாழும்
காதல் தகுதி தானே!!!
இள ரத்தப் பாய்ச்சலாய்
எதிர்காலத்தை மறந்து
நிகழ்காலத்தில் புன்னகைப்பது
குழந்தை என்றால் -
இளமை ரத்தப் பாய்ச்சலாய்
எதிர்ப்புகளை மறந்து
நிகழ்வுகளில் பூரித்துபோகும்
காதல் குழந்தை தானே!!!
நீ வருத்தப்படுத்தினாலும்
நீ வருத்தப்படகூடாதென்று
நினைப்பவள் தாய் என்றால் -
வருத்தப்படுத்துவது நீயானால்
அறிவுரையோடு திருத்திவைக்கும்
காதல் தாய் தானே!!!
உனக்கான தருணத்தில்
உனக்கானவர்களை நினைப்பது
பாசம் என்றால் -
உனக்கானவளையே நினைத்து கொண்டிருக்கும்
காதல் பாசம் தானே!!!
உனக்குள்ளிருக்கும்
உன்னை தேடுவது யோகம் என்றால் -
எனக்குள்ளிருக்கும்
என்னை தேடவைக்கும்
காதல் யோகம் தானே!!!
உதடுகள் சிரித்து
இதயம் துடித்து
மனம் இளமையாவது
மகிழ்ச்சியால் என்றால் -
உதடுகள் இணைத்து
இதயம் துடிதுடிக்க வைத்து
மனதை தூய்மையாக்கும்
காதல் மகிழ்ச்சி தானே!!!
இப்படியாய்..,
இவை,
தனித்தனியாய்
உலகத்தின் உன்னதம் என்றால்
காதலை